எனது நேர்காணல் அனுபவம் !
தொண்ணூறில் ஒன்றாய் நானும்
நேர்காணலுக்கு சென்றேன்..!
ஆன்றோரும் சான்றோரும் ..
கூடி இருக்க அவை நடுவே ..
ஒரு கத்துக்குட்டியாய் போய் அமர்த்திருந்தேன் ...!
சறுக்கி விடும் என எதிர்பார்த்த சுற்றுகளில்
சறுக்கி கொண்டே முன்னேறினேன் ..!
வந்த தொன்னூறில் சிலர் தடுமாற
தளராத முப்பது பேரில் ஒன்றானேன்..!
அசல் சான்றிதல்களுடன் வாருங்கள்
என்று சொல்லியனுப்ப ..
நகல் கூட இல்லாமல் அசராமல்
சென்றேன் அடுத்த நாள் சுற்றுக்கு ..!
தேர்வாளர் எங்கள் கருத்துக்களை
பகிர 2 நிமிடம் அவகாசம் கொடுக்க ..
அவகாசம் முடிந்தவுடன் மூச்சுஇறைக்க
முழுங்கினேன் நம் பெண் முன்னேற்றத்தை பற்றி ..!
என் முழக்கம் தேர்வாளரின் காதில் எட்டியதால்
அடுத்த சுற்றுக்கு தேர்வானேன்
பன்னிரெண்டில் ஒருவனாக ..!
சான்றிதழ்கள் சரிபார்க்க பட்டன
எனது பெயர் அழைக்கப்பட்டது ..
நானோ அடுத்த சுற்று என்று நெருங்க
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் போதாது
என்று கூறி அனுப்பிவிட்டனர் ..!
சுற்றுகளில் தோற்று இருந்தால் கூட
கவலை பட்டிருக்க மாட்டேன் ..
துவண்டு போன என் தோள்களில்
தோழர்கள் தட்டி கொடுக்க ..!
நாம் ஒரு நிறுவனத்தை
விட்டு விட்டோமா அல்ல
ஒரு நிறுவனம் நம்மை
விட்டு விட்டதா என்ற குழப்பதிலே ...
நான் கற்று கொடுத்த என் நண்பன்
அடுத்த சுற்றுக்கு போவதை ஆனந்தமாய்
கண்டு ரசித்த படி வெளியேறினேன் ..!
தொண்ணூறில் ஒன்றாய் நானும்
நேர்காணலுக்கு சென்றேன்..!
ஆன்றோரும் சான்றோரும் ..
கூடி இருக்க அவை நடுவே ..
ஒரு கத்துக்குட்டியாய் போய் அமர்த்திருந்தேன் ...!
சறுக்கி விடும் என எதிர்பார்த்த சுற்றுகளில்
சறுக்கி கொண்டே முன்னேறினேன் ..!
வந்த தொன்னூறில் சிலர் தடுமாற
தளராத முப்பது பேரில் ஒன்றானேன்..!
அசல் சான்றிதல்களுடன் வாருங்கள்
என்று சொல்லியனுப்ப ..
நகல் கூட இல்லாமல் அசராமல்
சென்றேன் அடுத்த நாள் சுற்றுக்கு ..!
தேர்வாளர் எங்கள் கருத்துக்களை
பகிர 2 நிமிடம் அவகாசம் கொடுக்க ..
அவகாசம் முடிந்தவுடன் மூச்சுஇறைக்க
முழுங்கினேன் நம் பெண் முன்னேற்றத்தை பற்றி ..!
என் முழக்கம் தேர்வாளரின் காதில் எட்டியதால்
அடுத்த சுற்றுக்கு தேர்வானேன்
பன்னிரெண்டில் ஒருவனாக ..!
சான்றிதழ்கள் சரிபார்க்க பட்டன
எனது பெயர் அழைக்கப்பட்டது ..
நானோ அடுத்த சுற்று என்று நெருங்க
பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் போதாது
என்று கூறி அனுப்பிவிட்டனர் ..!
சுற்றுகளில் தோற்று இருந்தால் கூட
கவலை பட்டிருக்க மாட்டேன் ..
துவண்டு போன என் தோள்களில்
தோழர்கள் தட்டி கொடுக்க ..!
நாம் ஒரு நிறுவனத்தை
விட்டு விட்டோமா அல்ல
ஒரு நிறுவனம் நம்மை
விட்டு விட்டதா என்ற குழப்பதிலே ...
நான் கற்று கொடுத்த என் நண்பன்
அடுத்த சுற்றுக்கு போவதை ஆனந்தமாய்
கண்டு ரசித்த படி வெளியேறினேன் ..!

