என்னவள்

by 11:48 0 comments

                                                          என்னவள்
                                                                    - என் (னை பெற்றேடுத்த) அவள்
            



வெட்டியாய் ஊரை சுற்றி வெகுநேரம் கடந்து வந்த பின்
    கடுப்புடன் கடிந்துரைக்கும் அவள், சண்டையிட்ட
நான் சாப்பிடுவதற்காக  கடிந்துரைப்பதை நிறுத்திவிட்டு
   சமாதான படுத்துவாள் சாப்பிடாமல் நான் தூங்கிடக்கூடாதென்பதற்காக !!!

பண்டிகை நாளில் புத்தாடையில் கூட அவ்வளவாக தெரியாத
 அவள் அழகு , உடலூறு வந்த போதும் எங்கள் பசி போக்கிட
 நெருப்பில் வெந்து தனித்த பின் முகத்தில் இருக்கும் கரியை
  துடைக்கும் பொது தெரிய வரும்  ... !


தரமான இடத்தில் தலை வாழை இலையில் அறுசுவை
 படையலிட்டாலும் ,அடங்காத நாவை கூட
உப்பு உறைப்பின்றி அவரசர அவரசரமாக செய்யும்
 முள்ளங்கி  சாம்பாரிலும் உருளை பொரியலிலும் அடக்கிவிடுவாள் ... !

அப்பன் இருக்கும் பொது அவருடன் வந்த கஷ்டத்தையும் , அவர் விட்டு
 சென்ற பின் வந்த கஷ்டத்தையும் கண்ணீரில் கூட காட்டவில்லை அவள்,
நான் கவலையில் கரைத்துவிட கூடாதென்று , வெட்கமின்றி ஒத்துக்கொள்கிறேன் - நான் தோற்றுவிட்டேன் அவள் கல் நெஞ்சம் முன் !!!

வார்த்தைகள் போதாது அவளை வர்ணிக்க ,
 காகிதங்கள் போதாது அவளை பற்றி கட்டூரை எழுத ,
எந்த பொருளுடன் ஒப்பிட முடியாதவள்
எல்லா கடவுளை விட ஈடு இணையற்றவள் - என் அவள்  !!!

பட்டென்ன பட்டு  நவரத்தினங்கள் இளைத்து நூலாக்கி
 பவளங்கள் வைரங்கள் பதித்து தங்க ஊசியால்
நெய்து கொடுத்தாலும் ஈடாகுமா அது , அவளின்
 இத்துணை வருட அல்லல்களுக்கும் துன்பங்களுக்கும் முன்னாள் ...!


அப்பனின் ஆசியுடன் அண்ணனும் நானும்
 உன் இனிய பிறந்த நாளில் ,
இறைவனை பிரார்த்தனை செய்கிறோம்  ,
இன்னும் ஒரு பிறவி உன் மகனாக வேண்டுமென்று  ....