சொந்த ஊரிலிருந்தும் சொந்தம்களிடமிருந்தும்
சில மைல் தூரம் !
தந்தை விட்டு சென்ற சுமை, கடன்
என மனதில் சில பாரம் !
அம்மாவோ கை ருசியில் வடித்து கொட்ட
அப்பனோ செல்லம் கொடுக்காதே என கிழித்து கொட்ட !
அக்காவிடம் அன்பு சண்டை இட்டு கொண்டே
அண்ணனுடன் தலை வாழை விருந்து உண்டதை !
நினைத்து கொண்டே தினம் தினம் உண்போம் !
( உப்பு உரைப்பிலா உணவுகளை)
பள்ளி செல்லும் பச்சிளம் குழந்தை போல
காலண்டரை பார்த்து கணக்கு போட்டு !
மூன்று மாதம் கழித்து வரும் பண்டிகைக்கு
முன் கூட்டியே முன் ஏற்பாடு செய்துவிடுவோம் !
அந்த மாத செலவுகளுக்கு பர்ஸை தயார் செய்திருப்போம் !
பருவத்தில் பிரதி மாதம் புது உடை வாங்கியிருந்தாலும்
பண்டிகையில் கூட ஓட்டை விழுந்த
பேண்டை ஒட்டு போட்டு அணிந்து
தங்கை ஆசை பட்ட சுடிதாருக்காகவும் !
தம்பி விரும்பி கேட்ட ஜீன்ஸ்க்காகவும் பணம் சேர்ப்போம் !
ஒன்றாய் கூடி இருந்த சித்தப்பன்-சித்தி
மகள் வளையல் பூட்டு விழாவிற்கும் !
ஒரே வீட்டில் என்னையும் வளர்த்த
பெரியப்பனின் மகன் கல்யாணத்திற்கும் !
வெறும் கையுடன் செல்ல முடியாததால் விடுப்பு இல்லை என பொய்யுரைப்போம் !
தீடிரென்று தடுக்கி விழுந்த அப்பத்தாளின்
ஆஸ்பத்திரி செலவுகளுக்கு அங்கு இங்கு
ஓடியும் பணம் இல்லாத போது ஐநூறு ஆயிரம்
குடுத்து உதவும் பள்ளி நண்பனையும் !
பக்கத்துக்கு அறை அண்ணனையும் நிலை மறந்து கட்டி அணைத்திருப்போம் !
தம்பி உருவிலோ தங்கை வயதிலோ
யாரோ கடந்து செல்லும் போதோ !
உடல் நிலை சரியிலா பொழுதில்
அம்மை அப்பனின் குரல் கேட்கும் போதோ !
கண்களில் கசியும் கண்ணீரை மறைத்து கொண்டு நடித்துத்திருப்போம் !
திங்களின் நிழல் கொடுக்கும் திண்ணை கொண்ட வாசலிலும்
உயர் ரக மர வகையில் செய்த உல்லாச ஊஞ்சல் கொண்ட முற்றத்திலும்
வேப்ப மர காற்றிலும் வாழை மர தோப்பிலும் வாழ்ந்த நாம் !
சிக்குண்ட சிலந்தியின் சின்ன வலையில் வாழும் சிலரில்
ஒருவராக வாழ பழகியிருப்போம் !
அடிமையாக்கி வைத்திருந்தவன் ஆண்டு சென்ற
பின்னும் அயல் நாட்டு கம்பெனிகளுக்கு
அடிமையாய் நாங்கள் இருப்பது அவன்
500 ரூபாய் சேர்த்து குடுக்கும் அப்ரைசல்க்கும்
அப்பா அம்மாவின் மருத்துவ இன்சூரன்ஸகளுக்கும் !
எங்கள் நகர வாழ்க்கை !!!!!
நரக வாழ்க்கை !!!!!!!!!!!!!!

