கொத்தடிமைகளாய் கொடுங்கோல் ஆட்சியின்
சித்திரவதையில் சில நூறு ஆண்டுகள்
வீட்டிற்கு ஒருவரை பலி கொடுத்து
விடு பட்டு விட்டோம் அவனிடமிருந்து கூட ...!
மனிதம் மறந்து மனசாட்சி இழந்து
மரபில் மட்டும் மனிதனாய்
எப்போது விடுதலை இந்த
சாதி எனும் மிருகத்திடமிருந்து ..!
பஞ்சு மரம் போல் மென்மையாக
படர்ந்தாலும் பரவாயில்லை
ஆலமரம் போல் அடிவரை
வேர் ஊன்றி இருக்கிறது சாதிய வெறி !
அந்த மரத்தை வெட்டவும் முடியாமல்
அடியோடு சாய்க்கவும் உதவாத
எங்கள் பகுத்தறிவு பாட புத்தகத்தில்
வெறும் பக்கங்களாகவே உள்ளது ..!
சித்திரவதையில் சில நூறு ஆண்டுகள்
வீட்டிற்கு ஒருவரை பலி கொடுத்து
விடு பட்டு விட்டோம் அவனிடமிருந்து கூட ...!
மனிதம் மறந்து மனசாட்சி இழந்து
மரபில் மட்டும் மனிதனாய்
எப்போது விடுதலை இந்த
சாதி எனும் மிருகத்திடமிருந்து ..!
பஞ்சு மரம் போல் மென்மையாக
படர்ந்தாலும் பரவாயில்லை
ஆலமரம் போல் அடிவரை
வேர் ஊன்றி இருக்கிறது சாதிய வெறி !
அந்த மரத்தை வெட்டவும் முடியாமல்
அடியோடு சாய்க்கவும் உதவாத
எங்கள் பகுத்தறிவு பாட புத்தகத்தில்
வெறும் பக்கங்களாகவே உள்ளது ..!
