நான் சுற்றி திரிந்து வட்டமடித்த என் அலுவலகத்தில்
இனி என் நினைவுகள் மட்டுமே சுற்றி திரிய போகிறது ...
தேனீர், உணவு இடைவேளைகளில் எனக்கும் சேர்த்து இடம்
பிடித்த நண்பர்களே இனி அது எனக்கில்லை ...
எதிர் அணியிடம் நான் இருந்து விவாதித்து சண்டையிட்ட
இடத்தில் இனி வேறு யாரோ ஒருவர் இருக்க போகிறார் ...
எப்பொழுதும் வேடிக்கையாக பேசும் என் வாடிக்கையாளர்
இனி என்னை திட்டுவதற்கு எங்கே என தேட போகிறார் ...
விடாமுயற்சியையும் விவேகத்தையும் கற்று தந்த அலுவலகமே
உன்னை விட்டு விடைப்பிரிய இருக்கிறேன் ...
எதற்கும் அசையாமல் அமைதியாய் இருந்து
வழி நடத்திய ஆசான் என் அணி தலைவர் முதல் ...
அன்பாய் இருக்கும் அர்ச்சனா ,
அமைதியான ஆனந்த் ,
துரு துரு துர்கா ,
பாசமான பிரான்சிஸ் ,
புன்சிரிப்பு மாப்பிளை கோபி ,
கண்ணிலே படாத கல்யாண் ,
கனிவாய் பேசும் கலை,
கிராமத்து தங்கம் கிருபா ,
தலைமுடியுடன் விளையாடும் தங்கை மீனா ,
சேட்டைகள் செய்யும் சரவணா,
என் உடன்பிறவா சகோ சிந்து ,
மௌனமான தெய்வா அக்கா ,
மேலும் பாசமுள்ள சக்தி , சூர்யா , சரண்யா , பிரகாஷ் , டிட்டி ,ரேகா அக்கா...
கடந்து வந்த இரண்டு வருட பயணத்தில் எல்லோரிடத்திலும் புன்னைகளையும் மகிழ்ச்சியையும் விட்டு வந்திருக்கிறேன் என நினைக்கிறன் எவரிடமேனும் மனக்கசப்பை விட்டு வந்திருந்தால் மன்னிக்கவும் ....
நட்பு காட்டிய அனைவருக்கும் அன்பை தெரிவித்து விட்டேன் ..
எங்கே என்னை விட்டு செல்கிறாய் என கேட்கும் என் இருக்கையை தவிர ...
இன்னும் சொல்ல மறந்த கதைகளுடன் விடை பெறுகிறேன் ..!

