காதல் சொல்ல ...
வெட்டி எடுத்த நிலா துண்டு போல
சற்றே உயரமான நெற்றி ....
காண்பவரை கரையவைக்கும் கருப்பு
வெள்ளை பனிப்பாறைகளாய் கண்கள் ...
மர்மத்தின் அழகோவியம் எகிப்து
முக்கோணம் போல மாய மூக்கு ..
நான் சுவைப்பதற்காகவே எனக்காக
படைக்கப்பட்ட கனிகளாய் உதடுகள் ...
பார்வையை பறிக்கும் வெளிச்சம்
வீசும் பச்சரிசி முத்து பற்கள் ...
குளத்தாமரை போல கார்மேக
கூந்தலுக்குள் மறைந்திருக்கும் காது ...
ஜதியே இல்லாமல் இடையை தொட்டு
பரதம் ஆடும் மயில்தோகை கூந்தல் ...
மீனவனின் வலை போல
என்னை வளைத்து போடும் ஜிமிக்கி ...
வானவில்லில் கண்டு எடுக்காத நிறம்
கொண்ட மென்மையான தேகம் ...
என் நிச்சிய மோதிரத்திற்காகவே
ஏங்கும் விரல் கொண்ட கைகள் ...
என்னை அருந்ததி பார்க்க வைப்பதற்காகவே
அளவெடுத்து செய்ய பட்ட கால்கள் ...
அவளை பார்த்த குற்றத்திற்காக
என்னை கைது செய்யும் கொலுசு ...
நடந்து செல்லும் போதே அழகிய
வரை படம் வரையும் பொற்பாதம் ...
மொத்தத்தில் அவள் கவிஞர்கள் சொல்ல மறந்த காவியம்
பிரம்மன் எனக்காகவே வானவில்லில் திட்டிய ஓவியம் ...
யாருக்குத்தான் தோணாது உன்னிடம் காதல் சொல்ல .....
வெட்டி எடுத்த நிலா துண்டு போல
சற்றே உயரமான நெற்றி ....
காண்பவரை கரையவைக்கும் கருப்பு
வெள்ளை பனிப்பாறைகளாய் கண்கள் ...
மர்மத்தின் அழகோவியம் எகிப்து
முக்கோணம் போல மாய மூக்கு ..
நான் சுவைப்பதற்காகவே எனக்காக
படைக்கப்பட்ட கனிகளாய் உதடுகள் ...
பார்வையை பறிக்கும் வெளிச்சம்
வீசும் பச்சரிசி முத்து பற்கள் ...
குளத்தாமரை போல கார்மேக
கூந்தலுக்குள் மறைந்திருக்கும் காது ...
ஜதியே இல்லாமல் இடையை தொட்டு
பரதம் ஆடும் மயில்தோகை கூந்தல் ...
மீனவனின் வலை போல
என்னை வளைத்து போடும் ஜிமிக்கி ...
வானவில்லில் கண்டு எடுக்காத நிறம்
கொண்ட மென்மையான தேகம் ...
என் நிச்சிய மோதிரத்திற்காகவே
ஏங்கும் விரல் கொண்ட கைகள் ...
என்னை அருந்ததி பார்க்க வைப்பதற்காகவே
அளவெடுத்து செய்ய பட்ட கால்கள் ...
அவளை பார்த்த குற்றத்திற்காக
என்னை கைது செய்யும் கொலுசு ...
நடந்து செல்லும் போதே அழகிய
வரை படம் வரையும் பொற்பாதம் ...
மொத்தத்தில் அவள் கவிஞர்கள் சொல்ல மறந்த காவியம்
பிரம்மன் எனக்காகவே வானவில்லில் திட்டிய ஓவியம் ...
யாருக்குத்தான் தோணாது உன்னிடம் காதல் சொல்ல .....

