ப்ரியமான தோழி
தூக்கம் தொலைத்து நிற்கும் போது எனக்கு
ஆரிரோ பாட வந்த அன்னையோ
பாசமான கண்டிப்புடன் எனக்கு
அன்பை வாரி தரும் அப்பனோ
செல்லும் பாதை சரி இல்லை என்று என்னை
அதட்டி அரவணைக்கும் அண்ணனோ
அன்னைக்கு இணையாக எனக்கு
அக்கறையை காட்டும் அக்காவோ
அதட்டல்களுக்கு பயந்து என்னிடம்
தவறு செய்து மாட்டும் தம்பியோ
அளவுக்கு மீறிய குறும்புகள் செய்யும் போது என்னை
தட்டி கேக்கும் தங்கையோ
சுக துக்கத்தில் பங்கேற்கும் உறவுகளோ
இல்லையே என்னுடன் இருக்கும் நீ யார் ?
கடவுளால் அனுப்பப்பட்டு அவரால்
அனுபவிக்க முடியாத உன்னத படைப்பு நீ
என்............. ப்ரிய தோழி ...
பெரிதாக ஒன்றும் வேணாம் உன் நட்பை தவிர
இருந்தாலும் ஒரு யாசகனாய் உன்னிடம் யாசகமாய் கேட்பது
உன் ...............மந்திர புன்னகையை...
பிறப்பொன்று இனி எடுத்தால் கூட
பிரம்மனிடம் கேட்பது மீண்டும் உன் தோழனாக பிறக்க
தூக்கம் தொலைத்து நிற்கும் போது எனக்கு
ஆரிரோ பாட வந்த அன்னையோ
பாசமான கண்டிப்புடன் எனக்கு
அன்பை வாரி தரும் அப்பனோ
செல்லும் பாதை சரி இல்லை என்று என்னை
அதட்டி அரவணைக்கும் அண்ணனோ
அன்னைக்கு இணையாக எனக்கு
அக்கறையை காட்டும் அக்காவோ
அதட்டல்களுக்கு பயந்து என்னிடம்
தவறு செய்து மாட்டும் தம்பியோ
அளவுக்கு மீறிய குறும்புகள் செய்யும் போது என்னை
தட்டி கேக்கும் தங்கையோ
சுக துக்கத்தில் பங்கேற்கும் உறவுகளோ
இல்லையே என்னுடன் இருக்கும் நீ யார் ?
கடவுளால் அனுப்பப்பட்டு அவரால்
அனுபவிக்க முடியாத உன்னத படைப்பு நீ
என்............. ப்ரிய தோழி ...
பெரிதாக ஒன்றும் வேணாம் உன் நட்பை தவிர
இருந்தாலும் ஒரு யாசகனாய் உன்னிடம் யாசகமாய் கேட்பது
உன் ...............மந்திர புன்னகையை...
பிறப்பொன்று இனி எடுத்தால் கூட
பிரம்மனிடம் கேட்பது மீண்டும் உன் தோழனாக பிறக்க

